இன்று பலரும்  பல்வேறு நோக்கத்திற்காக ஸ்மார்ட் போன்களை வாங்குகிறார்கள். அதில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றை பபயன்படுத்துவதற்கு என்று ஸ்மார்ட்போன் வாங்குபவர்களும் உண்டு.
ஆரம்பத்தில் கணினிகளின் ஊடாக மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் சமூக வலைத்தளம் இன்று மொபைல் போன்கள் மூலம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
எனவே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் ஆளுக்கொரு பேஸ்புக் கணக்கு என வைத்திருந்தாலும் சிலர்கள் இரண்டு மூன்று என வைத்திருப்பதும் உண்டு. இருந்த போதிலும் நாம் எமது ஸ்மார்ட்போனில் நிறுவும் பேஸ்புக் செயலி மூலம் ஒரே நேரத்தில் ஒரு பேஸ்புக் கணக்கை மாத்திரமே பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஒன்றை பயன்படுத்திவிட்டு மற்றுமொன்றை பயன்படுத்த வேண்டுமென்றால் ஏற்கனவே பயன்படுத்திய கணக்கிலிருந்து வெளியேறிய பின்னர் தான் மற்றைய பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும். இது சற்று சிரமமான காரியம் அல்லவா? இதற்கு தீர்வை தருகிறது Parallel Space எனும் ஆண்ட்ராய்டு ஆப்.
பரிந்துரைக்கப்படும் பதிவு: ஸ்மார்ட் போனின் திரையிலிருந்து வரும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் ஒரு ஆண்ட்ராய்டு ஆப்.
மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியுமான இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியும்.
இனி இந்த செயலியை தரவிறக்கி எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

Parallel Space பயன்படுத்துவது எப்படி?

  1. முதலில் Parallel Space எனும் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்க.How to use Parallel Space in Tamil
  2. நிறுவப்பட்ட செயலியை திறந்து கொள்க. திறந்ததன் பின்னர் சிறிது நேரத்தில் தோன்றும் “START” பட்டனை அலுத்துக.Parallel Space ஆண்ட்ராய்டு ஆப்
  3. இனி பட்டியலிடப்படும் செயலிகளில் பேஸ்புக் செயலியை தெரிவு செய்து “Add to Parallel Space” என்பதை அலுத்துக.
அவ்வளவுதான்! இனி Parallel Space செயலியின் உள்ளே மற்றுமொரு பேஸ்புக் செயலியை காணலாம். பிறகென்ன, அதனை சுட்டுவதன் மூலம் உங்களது இரண்டாவது பேஸ்புக்  கணக்கையும் சிரமமின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Parallel Space செயலியின் மேலதிக வசதிகள்:

  • உங்கள் மொபைல் போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக எந்த ஒரு ஆண்ட்ராய்டு போனிலும் இதனை நிறுவி பயன்படுத்தலாம்.
  • பேஸ்புக் மாத்திரம் இன்றி ஜிமெயில், வாட்ஸ்ஆப் என எந்த ஒன்றிற்கும் இது ஆதரவளிக்கும்.
  • Parallel Space இல் உள்ள செயலிகளை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு Pettern Lock இட்டு பாதுகாத்துக்கொள்ள முடியும்.