நீர் குடிக்க குவளை தேவைப்படுவது போல் இணையப்  பக்கங்களை புரட்டிப் பார்க்க இணைய உலாவி ஒன்றை நாம் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அல்லவா?
இணையத்தை உலாவருவதற்கு ஏராளமான இணைய உலாவிகள் இருந்தாலும் கூட கூகுள் குரோம் இணைய உலாவி இணையப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிருவகிப்படும் இது காலத்துக்குக் காலம் பல புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்படுவதுண்டு. இவ்வாறு மேம்படுத்தப்படும் போது பயனர்களுக்கு வழங்கப்படும் புதிய வசதிகள் பெரும்பாலும் பயனுள்ளவைகளாக இருந்தாலும் கூட சிலவேளைகளில் சில புதிய வசதிகள் இடைஞ்சலாகவோ அல்லது எரிச்சலூட்டும் விதத்திலோ அமைந்து விடுவதும் உண்டு.
அந்தவகையில் ஐபோன் மற்றும்  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கென கூகுள் நிறுவனம்  வழங்கும் கூகுள் குரோம் இணைய உலாவியின் அண்மைய பதிப்பில் ஆங்கில செய்திகள் அதன்  முகப்புப்பக்கத்தில் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது ஒரு சிலருக்கு வசதியாக தோன்றினாலும் பெரும்பாலானவர்களுக்கு இடைஞ்சலாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கூகுள் குரோம்
எனவே நீங்களும் இதனை இடைஞ்சலாக கருதினால் பின்வரும் முறையில் அவற்றினை நீக்கிக் கொள்ள முடியும்.
குரோம் உலாவியில் தோன்றும் ஆங்கில செய்திகளை நீக்குவது எப்படி?
  1. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நிறுவப்பட்டுள்ள கூகுள் குரோம் இணைய உலாவியை திறந்து கொள்ளுங்கள்.
  2. பின்னர் அதன் வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளாலான மெனு பட்டனை அலுத்துக.ஆண்ட்ராய்டு கூகுள் குரோம்
  3. இனி பெறப்படும் சாளரத்தில் “Settings” என்பதை அலுத்துக.ஆண்ட்ராய்டு கூகுள் குரோம் அமைப்புக்கள்
  4. Settings பகுதியில் “Advanced” எனும் உப பிரிவுக்குக் கீழ் வழங்கப்பட்டிருக்கும் “Privacy” என்பதை அலுத்துக.Google chrome hide articles settings
  5. இனி “Search and site suggestions” என்பதற்கு அருகே இருக்கும் Tick அடையாளத்தை நீக்கி விடுக.

அவ்வளவுதான்! இனி தேவையற்ற ஆங்கில பதிவுகள் கூகுள் குரோம் இணைய உலாவியின் முகப்புப்பக்கத்தில் தோன்றாது.