கூகுள் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது “கூகுள் தேடியந்திரம்” தான். உலகளாவிய ரீதியில் அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வரும் இது பல அற்புதமான வசதிகளையும் தருகின்றது.
அந்தவகையில் எவ்வித தமிழ் கீபோர்ட் செயலிகளையும் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் நிறுவாமல், தமிழ் மொழியிலேயே தகவல்களை தேடிப்பெற்றுக் கொள்ளும் வசதியை தருகிறது இணைய ஜாம்பவான் கூகுள்.
ஆண்ட்ராய்டு ஐபோன் உட்பட மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்தும் அனைவராலும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கூகுள் தேடியந்திரத்தில் முடக்கப்பட்டுள்ள “Handwrite” எனும் வசதியை செயற்படுத்திக் கொள்வது மாத்திரமே.
இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை நாம் படிப்படியாக கீழே பார்ப்போம்.

கீபோர்ட் செயலி இன்றி கூகுளில் தமிழில் தகவல்களை தேடுவது எப்படி?

  1. முதலில் உங்கள் மொபைல் போனில் தப்பட்டுள்ள ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி Googleஇணையதளத்துக்கு செல்க.Google.com in mobile browser
  2. பின்னர் கூகுள் இணையதளத்தில் இடது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள “Settings” என்பதை சுட்டுக.Google Search setting
  3. இனி தோன்றும் சாளரத்தில் “Search Settings” என்பதை அலுத்துக.Google handwriting Search in Tamil
  4. Search Settings பகுதியில் தரப்பட்டுள்ள  “Handwrite” என்பதை (Enable) செயற்படுத்திக்கொள்க. (மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு)
  5. பின்னர்  “Language in Google Products” எனும் பகுதியில் தமிழ் மொழியை தெரிவு செய்க.How to Search in Tamil in Google
  6. இறுதியாக “Search Settings” பகுதியில் கீழே வழங்கப்பட்டுள்ள “Save” எனும் பட்டனை அலுத்துக.
அவ்வளவுதான். இனி கூகுளின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று உங்களுக்கு தேவையான தகவல்களை உங்கள் விரல்களை கொண்டு எழுதுவதன் மூலமே தேடிப்பெற்றுக்கொள்ளலாம்.
நீங்களும் முயற்சித்துதான் பாருங்களேன்!