இன்றைய ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை பயன்படுத்த முடிவது மாத்திரமின்றி இணையத்தை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். அதாவது உங்கள் மொபைல் போனை ஒரு வை-பை ரவுட்டர் போன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே உங்கள் நண்பரின் மொபைலில் உள்ள இணையத்தை உங்களாலும், உங்களது மொபைலில் இருக்கும் இணையத்தை உங்கள் உறவினர்கள், நண்பர்களாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த தொழில்நுட்பமானது பொதுவாக வை-பை ஹாட்ஸ்பாட் என அழைக்கப்படுகிறது. இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் போன் உட்பட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். உங்களது அல்லது உங்கள் நண்பரது மொபைலில் வை-பை ஹாட்ஸ்பாட் வசதியை செயற்படுத்துவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

வை-பை ஹாட்ஸ்பாட் பயன்படுத்துவது எப்படி?

  1. நீங்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் எனின் அதன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Thering and Mobile hotspot என்பதில் Mobile hotspot என்பதை அலுத்துக.வை-பை ஹாட்ஸ்பாட்
  2. பின்னர் தோன்றும் சாளரத்தில் Mobile hotspot ஐ செயற்படுத்துவதற்கான பட்டனை அலுத்துக. இனி உங்களது வை-பை வலையமைப்பிற்கான பெயர் (SSID Name) மற்றும் கடவுச்சொல் (Password) போன்றவைகள் கிடைக்கும்.Mobile hotspot name and password
  3. இனி நீங்கள் இணையத்தை தொடர்பு படுத்த வேண்டிய மொபைலில் வை-பை ஐ செயற்படுத்தி உங்கள் வை-பை வலையமைப்பின் பெயரை தெரிவு செய்து கடவுச்சொல்லை உள்ளிடுக.
அவ்வளவுதான்.

இனி குறிப்பிட்ட மொபைலில் இணையத்தை பயன்படுத்த முடியும். இவ்வாறு வை-பை ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தி ஒரு மொபைலில் உள்ள இணையத்தை ஏனைய 5 தொடக்கம் 10 வரையான மொபைல்களுடன் அல்லது கணினிகளுடன் பகிந்துகொள்ள முடியும்.