மாட்ரிட்: உலகில் அனைத்து பணிகளையும் மனிதர்களை விட விரைவாக செய்ய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ரோபோக்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ரோபோவை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர். அந்நாட்டில் உள்ள வல்லாடோலித் பல்கலைக்கழகம் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவிடம் நாம் சந்தேகப்படும் வியாபாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் நடந்து இருக்கிறதா? இல்லையா? என்பது கண்டறியப்படும். இந்த ரோபோவில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். 
அதையும், நாம் கொடுக்கும் தகவலையும் அது சரிபார்க்கும். அதேபோல் அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்த கட்சியின் செயல்பாடு, அவர் பேசியது, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோ சரிபார்க்கும். இதன்மூலம் ஊழல் கண்டுபிடிக்கப்படும். இந்த ரோபோட் தவறு எவ்வளவு நடந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்று சதவிகிதம் கொடுக்கும். 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஊழல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவில் ஸ்பெயினில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் மெமரியில் ஏற்றப்பட்டுள்ளது

0 Comments