கூகுள் தரும் ஏராளமான சேவைகளுள் கூகுள் ட்ரான்ஸ்லேட் எனப்படும் கூகுள் மொழிபெயர்ப்புசேவையும் ஒன்றாகும்.
ஆங்கில சொற்களை தமிழ் அல்லது வேற்று மொழிக்கு மாற்றிக்கொள்ளவும், தமிழ் சொற்களை ஆங்கில மொழிக்கோ அல்லது வேற்று மொழிகளுக்கோ மாற்றிக்கொள்வதற்கும் என இது பல்வேறு வசதிகளை பயனர்களுக்கு வழங்குகிறது.
உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டுவரும் இது அனைத்து இணையப்பயனர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான மொழிகளுக்கு அதாரவளிக்கின்றமை இதன் விஷேட அம்சமாகும். இதன் சேவையை கணினி உட்பட ஆண்ட்ராய்டு மற்றும்  ஐபோன் சாதனங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் சாதனங்களை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட சில மொழிகளை இணைய இணைப்பு இன்றியும் மொழி பெயர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறான மொழிகளுள் தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளமை தமிழ் பேசும் எங்களுக்கு மிகவும் சந்தோசமான ஒரு விடயம் அல்லவா?
எது எப்படியோ, இணைய இணைப்பின்றி தமிழ் மொழிச் சொற்களை ஏனைய மொழிகளுக்கோ அல்லது ஏனைய மொழிச் சொற்களை தமிழ் மொழிக்கோ மாற்றிக்கொள்வது எப்படி என இனி பார்ப்போம்.
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் எனின், முதலில் கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

நீங்கள் முதன் முதாலாக கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலி பயன்படுத்துபவர் எனின்:

Tamil to english offline translate
நீங்கள் முதன் முதலாக கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை திறப்பவர் எனின் கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியில் “Set up Google Translate” எனும் சாளரம் தோன்றும். அதில் உங்களது பிரதான மொழியையும், நீங்கள் அடிக்கடி மொழிபெயர்க்க விரும்பும் மொழியையும் உள்ளிட்டு Finished என்பதை அலுத்துக. (Translate offline என்பது Tick செய்யப்பட்டிருக்கும் அதனை Untick செய்ய வேண்டாம்)  இனி நீங்கள் தெரிவு செய்த மொழிகளுக்கான தரவுகள் தரவிறக்கப்பட்டு இணைய இணைப்பு இல்லாத சந்தர்ப்பங்களிலும் உங்களால் மொழிகளை மொழிமாற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நீங்கள் ஏற்கனவே கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தியவர் எனின்:

நீங்கள் ஏற்கனவே கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை நிறுவியிருக்கும் அதேவேளை இணைய இணைப்பு இல்லாத போது மொழிமாற்றும் வசதியை செயற்படுத்திக் கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.
English to Tamil Translate
  1. முதலில் கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை திறந்துகொள்க.Google Translate offline translation in tamil
  2. பின்னர் அதன் இடது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள மெனு பட்டனை அலுத்துக.Google Tamil offline translate
  3. இனி Offline translation என்பதை தெரிவு செய்க.Google Offline Translate for Tamil
  4. Offline translation எனும் பகுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் மொழிகளில் உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து அதன் தரவுகளை தரவிறக்கிக் கொள்க. (நீங்கள் தமிழ் மொழியை தெரிவு செய்திருந்தால் அதன் தரவுகள் ஏறத்தாள 29MB வரை அமைந்திருக்கும்)

மொபைல் டேட்டா மூலம் ஆப்லைன் பேக் (Offline Pack) தரவுகளை தரவிறக்குவது எப்படி?

பொதுவாக நீங்கள் தெரிவு செய்யும் மொழிக்கான தரவுகள் (Offline language pack) வை-பை இணைப்பு கிடைக்கும் போதே தரவிறக்கப்படும் எனினும் கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சாதாரண இணைய இணைப்பிலும் (மொபைல் டேட்டா) நீங்கள் தெரிவு செய்த மொழிகளுக்கான தரவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்.
Google Translate Data usage settings

  1. இதனை மேற்கொள்ள கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் “Data Usage” என்பதை தெரிவு செய்க.Download offline translate files using wi fi or mobile data on Android
  2. இனி Data Usage எனும் பகுதியில் “Download offline translation files” என்பதை அலுத்துக.Download tamil offline translate in mobile data
  3. பின்னர் தோன்றும் சாளரத்தில் Use Wi-Fi or mobile networks என்பதை தெரிவு செய்க. அவ்வளவுதான்.

சாராம்சம்:

தெரியாத ஒரு மொழிச் சொல்லை தெரிந்த ஒரு மொழிக்கு மாற்றிக்கொள்வது தற்காலத்தில் மிக இலகுவான ஒரு விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் கூகுள் ட்ரான்ஸ்லேட் தரும் அற்புதமான சேவையே முக்கிய காரணம் என்றும் கூறலாம்.
எனவே தற்பொழுது இணைய இணைப்பு இல்லையென்றாலும் கூட கூகுள் மொழிபெயர்ப்பு சேவையின் உதவியுடன் எமக்குத் தெரியாத ஒரு மொழியில் அமைந்த சொல்லை தமிழ் மொழிக்கு மிகவும் சரியாகவும் விரைவாகவும் மாற்றிக்கொள்ள முடிகின்றமை வரவேற்க்கத்தக்க விடயமே.
எனவே தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கூகுளுடன் நாமும் நமது தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.