யூடியூப் பற்றி நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். எமக்குத் தேவையான எந்த ஒரு விடயம் தொடர்பிலும் முழுமையான விளக்கங்கள் கொண்ட வீடியோ கோப்புக்கள் யூடியூப் தளத்தில் குவிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு நிமிடமும் யூடியூப் தளத்திற்கு 300 மணித்தியாலங்கள் கொண்ட வீடியோ கோப்புக்கள் தரவேற்றப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5 பில்லியன் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன என்றால் ஆச்சரியமாய் இருக்கின்றதா?
எது எப்படியோ நாம் இப்பொழுது விடயத்திற்கு வருவோம். கூகுள் தரும் யூடியூப் செயலி மூலம் எம்மால் வீடியோ கோப்புக்களை பார்க்க மாத்திரமே முடியும். அவற்றை டவுன்லோட் செய்ய முடிவதில்லை. என்றாலும் யூடியூப் கோ (YouTube Go) எனும் செயலியானது வீடியோ கோப்புக்களை பார்க்க உதவும் அதே நேரம் அவற்றை தரவிறக்கிக்கொள்ளவும் நண்பர்களுடன் வேகமாக பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
தொடர்புடைய இடுகை: இணையத்தில் இருக்கும் எந்த ஒன்றையும் கடுகதி வேகத்தில் டவுன்லோட் செய்ய உதவும் ஆண்ட்ராய்டு ஆப்
இவ்வாறு தரவிறக்கிக் கொள்ள முடிவதால் உங்களுக்குத் தேவையான காணொளிகளை இணைய இணைப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தரவிறக்கி இணைய இணைப்பு கிடைக்காத சந்தர்ப்பங்களில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவற்றை கண்டுகளிக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் பதிவு: இணைய இணைப்பு இன்றி கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்துவது எப்படி?

மேலும் யூடியூப் கோ செயலியானது உங்களுக்கு தேவையான வீடியோ கோப்புக்களை உங்களது தேவைக்கு ஏற்ற விதத்தில் அவற்றின் தெளிவுத்திறனை தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ள உதவுகிறது. இதனால் வீடியோ கோப்புக்களை டவுன்லோட் செய்யும் போது மிதமிஞ்சிய இணையப்பாவனையை குறைத்துக் கொள்ள முடியும்.
இனி யூடியூப் கோ செயலியை பயன்படுத்தி யூடியூப் வீடியோ கோப்புக்களை தரவிறக்குவது எப்படி என பார்ப்போம்
  1. முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரை திறந்து “YouTube Go” என தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் யூடியூப் கோ செயலியை நிறுவிக்கொள்ளுங்கள். அல்லது யூடியூப் கோ செயலியை தரவிறக்க இங்கே சுட்டுக.YouTube Go Tamil on Android
  2. பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து உங்கள் மொபைல் இலக்கத்தை வழங்குவதன் மூலம் யூடியூப் கோ செயலியினுள் நுழைந்து கொள்க.YouTube Go App Tamil Guide
  3. Search பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவை தேடிப்பெற்று அதனை சுட்டுக.How to download YouTube Video on Android in Tamil
  4. இனி தோன்றும் சாளரத்தில் நீங்கள் விரும்பும் அளவில் வீடியோவின் தரத்தை தெரிவு செய்து “பதிவிறக்கு” (Download) எனும் பட்டனை அலுத்துக.
அவ்வளவுதான்! இனி நீங்கள் தெரிவு செய்த வீடியோ கோப்பு தரவிறக்கப்பட்டிருக்கும்.
YouTube Go Downloads in Tamil
டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோவை பார்ப்பதற்கு யூடியூப் கோ செயலியை திறந்து அதன் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள “பதிவிறக்கங்கள்” (Downloads) என்பதை சுட்டுவதன் மூலம் பார்க்கலாம்.