வேகமாக இயங்கிக் கொண்டிருந்த உங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போன் திடீரென மந்த கதியில் இயங்குகிறதா?  ஒரு முறை மின்னேற்றினால் நீண்ட நேரத்திற்கு இயங்கிக் கொண்டிருந்த உங்கள் மொபைல் போனில் தற்பொழுது விரைவிலேயே பேட்டரி காலியாகி விடுகிறதா? ஆரம்பத்தில் அதிக நினைவகத்தை கொண்டிருந்த உங்கள் ஸ்மார்ட் போனில் தற்பொழுது  ஒரு புகைப்படத்தை கூட சேமிக்க இடமில்லையா? கவலை எதற்கு? அதனை விட்டுவிடுங்கள்!
மேற்கூறியது உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு “டூப்ளிகேட் பைல்” எனப்படும் போலியான கோப்புக்களும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன. அதாவது உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படம், வீடியோ, அல்லது பாடல் போன்ற ஏதாவது ஒன்று எவ்வித மாற்றமும் இன்றி பிறிதொரு இடத்தில் அல்லது பல இடங்களில் சேமிக்கப்படுவதாகும். இதனை நீங்கள் உங்களை அறியாமல் தவறுதலாக சேமித்திருக்கலாம் இல்லையெனில் உங்கள் போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளின் செயற்பாடு காரணமாகவும் டூப்ளிகேட் பைல்கள் உருவாகியிருக்கலாம்.
இவ்வாறு சேமிக்கப்பட்டுள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்கிவிட்டால் மேற்கூறப்பட்டது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். என்றாலும் அவற்றை தனித்தனியாக கண்டறிய முயன்றால் அது இயலாத காரியம். எனவே அவ்வாறு டூப்ளிகேட் பைல்களை கண்டறியும் செயற்பாட்டை இலகுவாக்கி தருகிறது “சேர்ச் டூப்ளிகேட் பைல்”எனும் ஆண்ட்ராய்டு ஆப்.
இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாகவே தரவிறக்கி ஆண்ட்ராய்டு போன்களில் நிறுவிக் கொள்ளலாம். மேலும் குறுகிய நேரத்தில் உங்கள் மொபைல் போனில் இருக்கும் டூப்ளிகேட் பைல்களை தேடி அழிக்க உதவும் இந்த செயலியை பயன்படுத்துவதும் மிக இலகு.


Search Duplicate File ஆண்ட்ராய்டு ஆப்.

  1. Search Duplicate File என கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடுவதன் மூலம் இதனை தரவிறக்கலாம் அல்லது இங்கே சுட்டுவதன் மூலம் Search Duplicate File செயலியை தரவிறக்கிக் கொள்க.ஆண்ட்ராய்டு டூப்ளிகேட் பைல்
  2. பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து கொள்ளுங்கள். இனி உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து கோப்புக்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.Search Duplicate File Tamil
  3. பின் Search Duplicate File செயலியின் கீழ் மத்திய பகுதியில் வழங்கப்பட்டுள்ள Search செய்வதற்கான பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் மொபைலில் மேலதிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து கோப்புக்களும் காண்பிக்கப்படும்.Android Search Duplicate File in Tamil
  4. இனி தோன்றும் Delete பட்டனை அழுத்த மேலதிகமாக சேமிக்கப்பட்டுள்ள அனைத்து கோப்புக்களும் நீக்கப்பட்டு விடும்.

சேர்ச் டூப்ளிகேட் பைல் செயலியின் மேலதிக வசதிகள்:

  • உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்கள் மொபைலில் உள்ள குறிப்பிட்ட ஒரு போல்டரை (Folder) மாத்திரமோ அல்லது உள்ளக/வெளியக நினைவகத்தை (Phone memory/SDcard) மாத்திரமோ தெரிவு செய்து ஸ்கேன் செய்துகொள்ள முடியும்.
  • ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு கோப்பும் உங்கள் மொபைல் போனில் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை கண்டறியலாம்.
  • புகைப்படம், வீடியோ, ஆவணங்கள் என எந்த ஒன்றிற்கும் இது ஆதரவளிக்கிறது.
  • டூப்ளிகேட் பைல்களாக கண்டறியப்பட்டவைகளில் தேவையான ஒன்றை மாத்திரம் வைத்துவிட்டு  ஏனையவற்றை தானாகவே தெரிவு செய்து தருகிறது. இதனால் மிக விரைவிலேயே அவற்றை நீக்கிக் கொள்ள முடிவதுடன் உங்களது நேரத்தையும் சேமித்துக் கொள்ளலாம்.