இணைய உலகில் புதுமைகள் பல படைக்கும் கூகுள் நிறுவனம் தற்பொழுது இன்ஸ்டன்ட் கேம் (Instant Game) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இதற்கு முன் 2017 ஆம் ஆண்டில் கூகுள் அறிமுகப்படுத்திய இன்ஸ்டன்ட் ஆப் (Instant app) வசதியை போன்றதாகும்.
அதாவது நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக் கூடிய ஒரு விளையாட்டை (Game) டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யமால் விளையாடிப் பார்ப்பதற்கான வசதியே இதுவாகும். ஒரு விளையாட்டை உங்கள் மொபைலில் நிறுவி விளையாடும் போது பெறக்கூடிய அதே அனுபத்தை இந்த வசதி மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
Google Instant Game Tamil
இது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய அனைத்து விளையாட்டுகளுக்கும் ஆதரவளிக்காது. மாறாக கூகுளின் இன்ஸ்டன்ட் கேம் வசதிக்கு ஆதரவளிக்கக்கூடிய விளையாட்டுக்களை மாத்திரமே இவ்வாறு விளையாட முடியும்.
தொடர்புடைய இடுகை: இணையம் இன்றி கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தமிழ் மொழியை ஏனைய மொழிகளுக்கு மொழி மாற்றுவது எப்படி?
மேலும் இது குறிப்பிட்ட விளையாட்டை ஆண்ட்ராய்டு போனில் நிறுவுவதற்கு முன் ஒரு முன்னோட்டமாக (Demo) பார்க்கக்கூடிய வசதி ஆகையால் இதனை வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மாத்திரமே விளையாட முடியும்.
Google Play Instant Game in Tamil
தற்போதைக்கு பின்வரும் விளையாட்டுக்களை உங்கள் மொபைல் போனில் நிறுவாமல் பயன்படுத்திப் பார்க்க முடியும். பின்வரும் விளையாட்டுக்களை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடிப்பெறும் போது நீங்கள் காணக்கூடிய “INSTALL” பட்டனுக்கு அருகில் “TRY NOW” எனும் பட்டனை காணக்கூடியதாக இருக்கும். இனி குறிப்பிட்ட பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த விளையாட்டை உங்கள் மொபைலில் நிறுவாமலேயே விளையாடலாம்.

இன்ஸ்டன்ட் கேம் பட்டியல்:

இன்ஸ்டன்ட் கேம்
தற்போதைக்கு மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்களை மாத்திரமே மொபைலில் நிறுவாமல் பயன்படுத்திப் பார்க்க முடியும். எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான விளையாட்டுக்கள் இன்ஸ்டன்ட் கேம் ஆகவும், செயலிகள் இன்ஸ்டன்ட் ஆப் ஆகவும் இணைக்கப்படலாம்.
பரிந்துரைக்கப்படும் இடுகை: இணையம் இன்றி யூடியூப் வீடியோ பார்க்க கூகுள் தரும் வசதி 

இறுதிக் கருத்து:

வேகமாக இயங்கும் உலகுக்கு ஏற்ப கூகுளும் அதனது படைப்புக்களை மேம்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. இதற்கு சான்று பகரும் வகையில் “ஆக்சிலரேட்டட் மொபைல் பேஜஸ்” (AMP) எனும் மிக வேகமாக இணையப்பக்கங்களை உலாவரும் தொழில்நுட்பததை அறிமுகப்படுத்திய கூகுள், தற்போது இன்ஸ்டன்ட் கேம் எனும் மற்றொமொரு துரித தொழில்நுட்பத்தையும் இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
எனவே இன்ஸ்டன்ட் கேம் எனும் இந்த வசதி மூலம் நேர விரயத்தையும் இணையத்திற்காக செலவழிக்கப்படும் உங்கள் பணத்தையும் சேமித்துக்கொள்ள முடியும் என்றால் மிகையாகாது. எதிர்காலத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து செயலிகளும் இவ்வாறு மாற்றப்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.