இணையத்தில் இருந்து ஏதாவதொன்றை நாம் தரவிறக்க வேண்டுமென்றால் ஆரம்பத்தில் நாம் கணினியையே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுது நாம் விரும்பும் நேரத்தில் விரும்பிய இடத்திலிருந்து எமக்குத் தேவையான எந்த ஒன்றையும் எமது மொபைல் போனை பயன்படுத்தியே தரவிறக்கிக் கொள்ள முடிகிறது.
இவ்வாறு டவுன்லோட் செய்வதற்கு அநேகமானவர்கள் தங்கள் மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ள இணைய உலாவியையே பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக அனைத்து இணைய உலாவிகளிலும் பைல்களை தரவிறக்குவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அவைகள் புகைப்படங்கள், ஆவணங்கள் போன்ற சிறிய கோப்புக்களை டவுன்லோட் செய்ய உதவியாக அமைந்தாலும் 1 ஜீபி, 2 ஜீபி போன்ற அளவில் பெரிய பைல்களை தரவிறக்க அவ்வளவு பொருத்தமானதாக அமைவதில்லை.
எனினும் இணைய உலாவிகளில் வழங்கப்படும் டவுன்லோட் மேனேஜருக்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய பல ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் டவுன்லோட் வேகத்தை பல மடங்கு அதிகரித்துக் கொள்ள முடிவதுடன் இன்னும் ஏராளமான பல பயன்களை பெற்றுக்கொள்ள முடிகிறது.

பரிந்துரைக்கப்படும் பதிவு: யூடியூப் வீடியோக்களை தரவிறக்க உதவும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்
அவ்வாறான டவுன்லோட் மேனேஜர் செயலிகளில் அட்வான்ஸ் டவுன்லோட் மேனேஜர் செயலி மிக பயனுள்ள வசதிகளை வழங்கக்கூடிய செயலியாக விளங்குகிறது. இது கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மிக பிரபலமான இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளை ஒத்து காணப்படுகிறது. இதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். (டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.)

அட்வான்ஸ் டவுன்லோட் மேனேஜர் செயலியின் சிறப்பம்சங்கள்:

  • ஒரே நேரத்தில் மூன்று பைல்களை டவுன்லோட் செய்யலாம்.
  • டவுன்லோட் செய்யப்படும் பைலை சிறு சிறு பகுதிகளாக பிரித்து வெவ்வேறாக தரவிறக்கிய பின்னர் அவற்றை தானாகவே இணைத்து தருகிறது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் பெரிய பைல்களை கூட தரவிறக்கிக் கொள்ள முடிகிறது.
  • இணையத்தில் இருக்கும் டவுன்லோட் லிங்க்கை நீங்கள் கோப்பி (Copy) செய்தால் இது தானாகவே அதனை டவுன்லோட் செய்ய தயாராகிவிடும்.
  • பைல்களை தரவிறக்கும் போது அதனை இடையில் நிறுத்தவும் மீண்டும் தொடரவும் முடியும்.
  • 2 GB யை விட அதிக அளவை கொண்ட பைல்களுக்கும் ஆதரவளிக்கிறது. எனவே பெரிய அளவுகளை கொண்ட டோரென்ட் பைல்களை கூட இதன் மூலம் மிக இலகுவாக டவுன்லோட் செய்திட முடியும்.
  • டவுன்லோட் செய்யப்படும் வேகத்தை உங்களுக்கு தேவையான வகையில் கூட்டிக் குறைத்துக் கொள்ள முடியும்.
  • நீங்கள் ஆண்ட்ராய்டு லாலிபாப் அல்லது மார்ஷ்மல்லோ பதிப்பை பயன்படுத்துபவர் எனின் தரவிறக்கும் பைல்களை நேரடியாக எஸ்.டி கார்ட் நினைவகத்திலேயே சேமித்துக்கொள்ள முடியும்.
  • உடனடியாக தரவிறக்க வேண்டும் என்ற அவசியமில்லை மாறாக தரவிறக்கப்பட வேண்டிய நேரத்தை அட்வான்ஸ் டவுன்லோட் மேனேஜர் செயலியில் உள்ளிட்டுவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் அது தானாகவே டவுன்லோட் செய்ய ஆரம்பித்து விடும்.
  • டவுன்லோட் செய்யப்படும் வேகம், டவுன்லோட் செய்யப்பட்டுள்ள அளவு, தரவிறக்கி முடிக்க எடுக்கும் நேரம் உட்பட இன்னும் பல தகவல்களை நோடிபிகேஷன் பேனலில்  (Notification Panel) இருந்தே கண்காணிக்க முடியும்.
இவைகள் தவிர இன்னும் ஏராளமான வசதிகளை இந்த செயலி தருகிறது. நான் பெற்ற பயனை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதே எனது அவா!
அட்வான்ஸ் டவுன்லோட் மேனேஜர் (Advanced Download Manager) செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டுக