ஆரம்பத்தில் நாம் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் கணணியையே நாட வேண்டி இருந்தது. என்றாலும் இன்றைய வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணினிகள் மாத்திரமின்றி மொபைல் போன்களிலும் கூட தமிழ் மொழியை மிக வேகமாக தட்டச்சு செய்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இதன் காரணமாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் உட்பட இணையம் முழுவதிலும் தமிழ் மொழியின் ஆதிக்கத்தையும் காண முடிகிறது. எனவே நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் மிக இலகுவாகவும் விரைவாகவும் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்த ஒரு கீபோர்ட் செயலியை தேடுகிறீர்களா? அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது கூகுள் இண்டிக் கீபோர்ட் எனும் ஆண்ட்ராய்டு ஆப்.
இது தமிழ் மொழி உட்பட ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற இன்னும் பல மொழிகளை மிக இலகுவாக மொபைல் போன்களில் உள்ளீடு செய்துகொள்ள உதவுகிறது. மேலும் உங்கள் மொபைல் போனில் ஆங்கிலத்தை எங்கெல்லாம் பயன்படுத்துகிறீர்களோ அங்கெல்லாம் தமிழ் மொழியையும் தட்டச்சு செய்ய இந்த கீபோர்ட் செயலி துணை புரிகிறது.
தொடர்புடைய இடுகை: இணைய இணைப்பின்றி கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியில் உள்ள வசதிகள்:

  • இதன் மூலம் தமிழ்  மொழியை இரு வேறு முறைகளில் தட்டச்சு செய்யலாம்.
    • ஒலிப்பு முறை: நீங்கள் தட்டச்சு செய்யும் ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புக்கு ஏற்ப அதனை தமிழ் மொழிக்கு மாற்றி அமைக்கும் முறை இதுவாகும். உதாரணத்திற்கு “Thamil” என நீங்கள் உள்ளிட்டால் அது “தமிழ்”என தட்டச்சு செய்யப்படும்.
    • பூர்வீக முறை: கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியில் தோன்றக்கூடிய எழுத்துக்களை நேரடியாக தொடுகை மூலம் உள்ளிடுவதால் தட்டச்சு செய்யப்படும் முறையாகும்.
தமிழ் கீபோர்ட்
  • கீபோர்டின் பின்புலத்திற்கு உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பின்னணி வர்ணத்தையோ (Background Colour) பின்புல படத்தையோ (Background Image) இட்டுக்கொள்ள முடியும்.
  • கீபோர்ட் செயலியின் உயரத்தை உங்கள் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்க முடியும்.
உங்களுக்குத் தெரியுமா? கீபோர்ட் இன்றியும் கூகுளில் தமிழில் தகவல்களை தேடலாம்!

கூகுள் இண்டிக் கீபோர்டை ஆண்ட்ராய்டு போனில் நிறுவுவது எப்படி?

  1. முதலில் கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து உங்கள் மொபைல் போனுக்கு டவுன்லோட் செய்க.Tamil Keyboard For Android Mobile
  2. பின்னர் அதனை திறந்தவுடன் தோன்றும்  Select Google Indic Keybord in your Language & input settings எனும் இடைமுகத்தில் “ENABLE IN SETTINGS” எனும் பட்டனை அலுத்துக. இதன் போது பெறப்படும் இடத்தில் “Google Indic Keyboard” என்பதை தெரிவு செய்க.ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட்
  3. அடுத்து தோன்றும் இடைமுகத்தில் “SELECT INPUT METHOD” எனும் பட்டனை அழுத்தி English & Indic Languages” என்பதை தெரிவு செய்க.Google Indic Tamil Keyboard
  4. பின்னர் “Send anonumous usage statistics” என்பதில் Accept என்பதை தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்கு செல்க. (நீங்கள் கீபோர்ட் செயலியை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட செயலியை மேம்படுத்துவதற்காக கூகுளால் தானியங்கு முறையில் பெறப்படும் பின்னூட்டமே இதுவாகும். எனவே இதனை நீங்கள் விரும்பினால் தெரிவு செய்யலாம் இல்லையெனில் தவிர்க்கவும் முடியும்.)கூகுள் இண்டிக் கீபோர்ட்
  5. இனி Ready to go! எனும் இடைமுகத்தை காண்பீர்கள். அதில் அம்புக்குறி அடையாளமிடப்பட்டுள்ள பட்டனை அலுத்துக.
  6. பின்னர் உங்களது விசைபலகைக்கு (Keyboard) நீங்கள் விரும்பும் ஒரு வர்ணத்தை தெரிவு செய்து “GET STARTED” என்பதை அலுத்துக.
  7. இனி தட்டச்சு செய்யும் போது கூகுள் இண்டிக் கீபோர்ட் தோன்றும். அதன் மேற்பகுதியில் வழங்கப்பட்டுள்ள abc என்பதற்கு அருகே உள்ள இந்திய எழுத்துக்களை கொண்ட பட்டனை அலுத்துக.Tamil Keyboard for Android
  8. பின் தோன்றும் இடைமுகத்தில் “Tamil தமிழ்” என்பதை தெரிவு செய்து “Ok” பட்டனை அலுத்துக.Google Indic Keyboard
  9. முன்பு இந்திய எழுத்துக்களை கொண்ட பட்டன் அமைந்திருந்த இடத்தில் “அ”  எனும் பட்டனை காண்பீர்கள்.  பின்னர் அதனை அழுத்தி நான் மேற்குறிப்பிட்ட தட்டச்சு செய்யும் முறைகளில் ஒன்றை தெரிவு கொள்க.