யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்ய கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கும் ஆண்ட்ராய்டு ஆப் தொடர்பில் எமது முன்னைய பதிவின் ஊடாக நாம் பார்த்திருந்தோம். இதற்கு யூடியூப் கோ என்ற செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் நிறுவ வேண்டும்.
என்றாலும் எந்தவித செயலிகளையும் நிறுவாமல் உங்களது ஆண்ட்ராய்டு போனில் வழங்கப்பட்டுள்ள யூடியூப் அப்ளிகேஷனை மாத்திரம் பயன்படுத்தி யூடியூப் வீடியோக்களை ஆப்லைனில் பார்ப்பது எப்படி என்பதை இன்று பார்ப்போம்.
இணைய இணைப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் யூடியூப் வீடியோக்களை யூடியூப் அப்ளிகேஷனில் சேமித்து பின்னர் இணைய இணைப்பு கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவற்றை கண்டுகளிப்பதற்கான வசதியை கூகுள் யூடியூப் அப்ளிக்கேஷனிலேயே வழங்கியுள்ளது. என்றாலும் இந்த வசதி ஆரம்பகட்டமாக 16 நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. எனினும் தற்பொழுது இலங்கை, இந்தியா உட்பட மேலும் 109 நாடுகளுக்கு இந்த வசதி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்பொழுது உங்களாலும் இவ்வசதியை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.
தொடர்புடைய இடுகை: ஆப்லைனில் கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையை பயன்படுத்துவது எப்படி?

யூடியூப் ஆப்லைன் வசதியை பயன்படுத்துவது எப்படி?

  1. உங்கள் மொபைலில் இருக்கும் யூடியூப் செயலியை திறந்துகொள்க.
  2. உங்களுக்குத் தேவையான வீடியோவை தேடிப் பெறுக.
  3. குறிப்பிட்ட வீடியோ இயங்கும் போது அதற்குக் கீழே வழங்கப்பட்டுள்ள டவுன்லோட் பட்டனை அலுத்துக. இனி குறிப்பிட்ட வீடியோவை இணைய இணைப்பு கிடைக்காத சந்தர்ப்பத்திலும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

சேமிக்கப்பட்ட வீடியோவை பார்ப்பதற்கு யூடியூப் செயலியின் முகப்புப்பக்கத்தில் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள “Library” என்பதை சுட்டுக. அங்கு “Available Offline” என்பதற்குக் கீழ் நீங்கள் ஆப்லைனில் பார்ப்பதற்காக சேமித்த வீடியோவை காணலாம்.
குறிப்பு: மேலே 3 ஆவது படிமுறையில் நான் குறிப்பிட்டது போன்று “டவுன்லோட்” பட்டனை உங்களால் காண முடியாவிட்டால் யூடியூப் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிய பின்னர் மீண்டும் அதனை திறந்து முயற்சித்து பார்க்கவும்.