Tamil_News_large_1973933
அறிவியலின் அதிசயத்தில் உருவான ’செயற்கை கண்’; மனித கண்களை மிஞ்சிய செயல்பாடு!
மாசசூசட்ஸ்: விஞ்ஞானிகள் மனிதக் கண்களைப் போன்ற செயற்கை கண்களை உருவாக்கியுள்ளனர்.

அறிவியலின் கண்டுபிடிப்புகள் மனிதர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மனித உடல் உறுப்புகள் பாதிப்படைந்தால், அவற்றிற்கு இயற்கையான மாற்று கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

இதனால் செயற்கையான உறுப்புகளை உருவாக்கி, பொருத்திக் கொள்ளும் நடைமுறை தொடங்கியுள்ளது. அதில் சமீபத்திய கண்டுபிடிப்பு செயற்கை கண்கள்.

இதற்கான செயற்கை குவி ஆடி ஒன்றை, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ஆடி மனித கண்களில் குவி ஆடி தசையால் இயக்கப்படுவதைப் போலவே இயங்குகிறது.
இதன் அளவு 30 மைக்ரான் ஆகும். இந்த தட்டையாக ஆடி, மின் தூண்டுதலால் தசைகள் போல இயங்கி ஒளியை குவிக்கிறது.

இந்நிலையில் மின் தூண்டலில் விரிய, சுருங்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை குறைக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்