Looking For Anything Specific?

ads header

பிஎஸ்என்எல்-ஐ முந்திய வோடபோன்: வியப்பில் ஏர்டெல், ஜியோ

ஏர்செல் நிறுவனம் கடன் காரணமாக திவாலாகி உள்ளது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தங்களது எண்ணை போர்ட் செய்து வருகின்றனர்.
 
ஏர்செல் எண்ணை போர்ட் செய்வதற்கு டிராய் கால அவகாசத்தை நீட்டித்து வழங்கியுள்ளது. அதேபோல், மற்ற நிறுவனங்களும் கால தாமதமின்றி ஏர்செல் போர்ட்டிங்கை ஏற்று வருகிறது. 
 
அந்த வகையில், சமீபத்தைல் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுமார் 1.86 லட்சம் பேர் பிஎஸ்என்எல் சேவையை தேர்ந்தெடுத்து உள்ளதாக செய்திகல் வெளியாகியது. தற்போது பிஎஸ்என்எல்-ஐ முந்தியுள்ளது வோடபோன்.
 
ஆம், வோடவோன் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10 லட்சம் பேர் மாறியுள்ளதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக 4ஜி சேவை விரிவாக்கத்திலும் வோடபோன் ஈடுபட்டுள்ளது. 
 
இதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமாக தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது வோடபோன் நிறுவனம். ஏர்செல் சேவை முடக்கப்பட்டதற்கு பிறகு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்டெல், ஜியோ போன்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மாறுவார்கள் என எண்ணப்பட்ட நிலையில் வோடபோன் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments