ஆரம்பத்தில் கணினி மூலம் ஒரு ஆவணத்தை அச்செடுக்க (Printout) வேண்டுமெனில் நாம் அதனை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். பின் அதனை கணினியில் இருந்து அச்செடுக்க வேண்டும். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. இருக்கும் இடத்திலிருந்தே ஏராளமான பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும் ஸ்மார்ட் போன்கள் தற்பொழுது ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும் உதவுகிறது. ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கென வடிவமைக்கப்படும் பிரத்தியோகமான செயலிகள் இதனை சாத்தியப்படுத்துகின்றன.
இதற்கென்று ஏராளமான செயலிகள் இருந்தாலும் கூட மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கி வழங்கப்படும் “ஆபீஸ் லென்ஸ்” எனும் செயலி மிக அருமையாக செயற்படுகிறது. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இது எவ்வித விளம்பரங்களும் இடையூறுகளும் இன்றி முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அத்துடன் இது ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும்  விண்டோஸ் போன் ஆகிய பிரபலமான மூன்று ஸ்மார்ட் போன் இயங்குதளங்களுக்குமான பதிப்புக்களை கொண்டுள்ளது.

மொபைல் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி?

ஆபீஸ் லென்ஸ் செயலியை பயன்படுத்தி பௌதீக ஆவணங்களை மொபைல் மூலம் ஸ்கேன் செய்வது மிகவும் இலகு.
  1. ஆபீஸ் லென்ஸ் செயலியை நீங்கள் உங்களது மொபைல் போனில் நிறுவியிருக்க வேண்டும். நாம் கீழே வழங்கியிருக்கும் இணைப்பு மூலம் இதனை பதிவிறக்கி உங்கள் மொபைல் போனில் நிறுவிக் கொள்ளலாம்.ஆண்ட்ராய்டு ஸ்கேனர் ஆப்
  2. பின்னர் ஆபீஸ் லென்ஸ் செயலியை திறந்து கொள்க. இனி ஆபீஸ் லென்ஸ் அப்ளிகேஷனில் உள்ள கேமரா திறக்கப்படும். பின் கேமெர மூலம் ஆவணத்தை ஸ்கேன் செய்யும் போது உங்கள் ஆவணத்தின் நான்கு விளிம்புகளையும் அது தானகவே உணர்ந்து புகைப்படம் எடுக்க ஆயத்தமாகி விடும்.
  3. ஆவணத்தின் நான்கு விளிம்புகளும் சரியாக பொருந்திய பின் ஆபீஸ் லென்ஸ் செயலியின் கீழ் மத்திய பகுதியில் வழங்கப்பட்டுள்ள பெரிய வட்ட வடிவில் உள்ள பட்டனை அலுத்துக.ஆபீஸ் லென்ஸ்
  4. இனி அடுத்த பகுதியில், போட்டோவில் கூடுதலாக பிடிக்கப்பட்ட இடம், அதன் கோணம், ஆவணத்தின் வகை (Business card, Whiteboard, Document) போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம்.Office lens review in Tamil
  5. இறுதியாக நீங்கள் ஸ்கேன் செய்த ஆவணத்தை கேலரியில் அல்லது மைக்ரோசாப்ட் OneDrive இல் சேமித்துக் கொள்ள முடியும். தேவையென்றால் அவற்றை வாட்ஸ்அப், ஈமெயில், ப்ளூடூத் போன்றவற்றின் மூலம் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
தொடர்புடைய இடுகை: டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆண்ட்ராய்டு ஆப்

டிப்ஸ்:


Office lens output document1
  • இருள் சூழ்ந்த இடங்களில் ஃபிளாஷ்லைட் வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் ஆவணங்களை தெளிவாக ஸ்கேன் செய்யலாம்.Office Lens Android in Tamil
  • நீங்கள் ஸ்கேன் செய்யும் ஆவணத்திற்கு ஏற்ப கேமராவை மாற்றிக்கொள்வதன் மூலம் மிக நேர்த்தியான விளைவுகளை பெற முடியும். உதாரணத்திற்கு வணிக அட்டைகளை அல்லது அது போன்ற ஏனைய ஆவணங்களை ஸ்கேன் செய்யும் போது ஆபிஸ் லென்ஸ் கேமராவில் வழங்கப்பட்டுள்ள Business Card என்பதை தெரிவு செய்வது சிறந்தது.