ஆண்ட்ராய்டில் புதிய அப்டேட்டில் ஐரிஸ் ஸ்கேனர்!அடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய வெர்ஷனில் ஐரிஸ் ஸ்கேனர் எனப்படும் கண்மணி மூலமான பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பரவலாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தப்படும் ஆண்டராய்ட் இயங்குதளம் ஆங்கில எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்ட பெயருடன் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வெர்ஷனின் பெயரும் உணவுப் பொருள் ஒன்றின் பெயரிலேயே இருக்கும்.


கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்ட் கடைசியாக வெளியிட்டது ஆண்ட்ராய்ட் ஓரியோ (Android Orio). இதற்கு அடுத்து P என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயருடன் அடுத்த ஆண்ட்ராய்ட் வெர்ஷனை வெளியிட உள்ளது.

இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷனின் பெயர் பிஸ்டாசியோ ஐஸ் கிரீம் (Pistachio ice cream) என இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். இத்துடன் ஐபோன் X போன்ற திரையை அளிக்கும் வசதியையும் இதில் இருக்கலாம் என்று தெரிகிறது.