Looking For Anything Specific?

ads header

இன்று என்ன நாள் தெரியுமா? அடக் கடவுளே.. உங்கள் கூகுள் மேப்பை பாருங்கள்

இன்று என்ன நாள் தெரியுமா? அடக் கடவுளே.. உங்கள் கூகுள் மேப்பை பாருங்கள்
இன்று என்ன நாள் தெரியுமா? அடக் கடவுளே.. உங்கள் கூகுள் மேப்பை பாருங்கள்

இன்று முதல் மார்ச் 17 வரையில் உங்களுடைய கூகுள் மேப்பில் புதிதாக ஒன்று உங்களுக்கு வழிகாட்டும். அதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

இன்று மார்ச் 10ம் தேதி. ஆங்கிலத்தில் Mar 10. இதை சேர்த்து எழுதி பாருங்கள், MAR10. இன்னும் கொஞ்சம் உற்று கவனித்தால் MARIO. அடடே இது மெரியோ ஆச்சே.

90 களில் பிறந்தவர்களுக்கு மெரியோ என்பது கண்டிப்பாக மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். அப்போதைய காலக்கட்டத்தில் சூப்பர் மெரியோ வீடியோ கேம் விளையாடத சுட்டிகளே இருக்க முடியாது. இன்றும் சில வளர்ந்த சுட்டிகள் ஆன்லைனில், மொபைலில் சூப்பர் மெரியோ வீடியோ கேம் விளையாடுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது இன்று Mar 10, அதாவது MARIO என்று இருக்கும் இன்றைய தினத்தை Mario Day என்று கூகுள் வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக தனது கூகுள் மேப்பில் மெரியோவைக் கொண்டு ஒரு புதுமையை உருவாக்கியுள்ளது.
கூகுள் மேப்பில் நமது இருப்பிடத்தை நீல நிறத்தில் புள்ளியாக மட்டும் காட்டப்பட்டு வந்தது. தற்போது அதற்கு பதிலாக சூப்பர் மெரியோ இடம் பெற்றுள்ளது. வீடியோ கேம் போல் இருக்கும் இந்த புதிய அம்சத்தை பெறுவதற்கு, ஏற்கனவே உங்களிடம் இருக்கும் கூகுள் மேப்பை அப்டேட் செய்தாலே போதும்.

அப்டேட் செய்த பின்னர், கூகுள் மேப் நமது பயணத்தை துவங்கும் போது, அதில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கேள்விக்குறி ஐக்கானை கிளிக் செய்தால், சூப்பர் மெரியோ உங்களுக்கு வழிகாட்டும்.

கூகுள் மேப்பில் இந்த சூப்பர் மெரியோ வரும் மார்ச் 17 தேதி வரையில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments