Image result for மின்சார கார்களை தயாரிக்க மாருதி சுஸுகி ஆயத்தம்இந்தியாவில் மாருதி சுஸுகி கார் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன. அதே கார்களை எதிர்காலத்தில் ஹைபிரிட் அல்லது முழு மின்சாரம் தேர்வில் மாருதி சுஸுகி தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, ஹேட்ச்பேக் ரக கார்களான ஆல்டோ, செலிரியோ, ஸ்விப்ட் கார்களில் துவங்கி, எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) ரக கார்களான டிசையர், பலேனோ, பிரிஸ்ஸா வரை புதிய தலைமுறை மாடலாக மாற்றப்படும்போது அவை மின்சாரம் அல்லது ஹைப்ரிட் தேர்வுகளிலும் வெளிவரலாம். இந்திய அரசு, வாகன பயன்பாட்டை 2030ம் ஆண்டிற்குள் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சித்து வருகிறது.

 இந்த காலவரையை அடைவதற்குள் மாருதியின் மின்சார மற்றும் ஹைபிர்ட் கார்கள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் பிரபல கார்களில் ஒன்றான சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் மைல்டு-டீசல் ஹைபிரிட் தேர்வில் விற்பனையில் உள்ளது. இதன் காரணமாக, இந்த நிலைப்பாட்டை மாருதி எடுத்திருப்பது புதிதல்ல. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும், அது திருத்தப்பட்டபோதும், மைல்டு-ஹைபிரிட் மற்றும் முழு-ஹைபிரிட் கார்களின் வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மின்சார திறன் பெற்ற கார்கள் ஜிஎஸ்டி-க்கு கீழ் 12 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன. 

 அரசின் அதிகாரம் இப்படி இருப்பதால், பல்வேறு கார் நிறுவனங்கள் ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக மின்சார கார்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. வாகனங்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் முடிவை இந்திய அரசு முன்னதாகவே எடுத்திருந்தாலும், அதற்கு ஏற்றவாறு கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் இதுவரை பெரியளவில் தொடங்கவில்லை. எதிர்காலத்தில் வாகன பயன்பாடு மின்சார ஆற்றலுக்கு மாறப்போகிறது என்பது தெரியாமலேயே பலர் உள்ளனர். மஹாராஷ்டிராவின் நாக்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் மின்சார வாகன பயன்பாட்டை முழுவதுமாக அமல்படுத்த பலம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்புகளை நிறுவுவது அவசியம். அதுவரை ஹைபிரிட் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்தலாம்.