நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவரா? அப்படியாயின் APK எனும் சொல்லை நீங்கள் கேட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

APK என்றால் என்ன?

Android Packege Kit என்பதன் சுருக்கமே APK என அழைக்கப்படுகிறது. APK என்பது ஒரு பைல் போர்மட் ஆகும். அதாவது கோப்புக்களில் ஒரு வகை ஆகும். இவ்வாறான கோப்புக்களை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஒரு செயலியாக நிறுவ முடியும். வேறுவகையில் கூறினால் விண்டோஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் .exe எனும் கோப்பு வகையை போன்றதாகும்.

APK பைல் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் என்ன?

APK பைல் ஒன்றை பயன்படுத்தி ஒரு செயலியை எமது மொபைல் போனுக்கு நிறுவ வேண்டியதற்கான தேவை எமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம்.

கூகுள் ப்ளே ஸ்டோரிலே இல்லையாம்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத ஒரு செயலியை உங்கள் மொபைலில் நிறுவுவதற்கு. உதாரனாத்திற்கு யூடியூப் வீடியோவை தரவிறக்குவதற்கான செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் பெற முடியாது. எனினும் மூன்றாம் நபர் செயலிகள் மூலம் குறிப்பிட்ட வசதியை பெறலாம். இதற்கு அந்த செயலியின் APK பைலை பயன்படுத்தியே அவற்றை நிறுவ வேண்டும்.

இந்த செயலி உங்கள் நாட்டிற்கு இல்லை

ஆண்ட்ராய்டு செயலிகளை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்க முயற்சிக்கும் போது “இந்த செயலி உங்கள் நாட்டிற்கு இல்லை” (This item is not available in your country) எனும் பிழைச்செய்தியை அவதானித்திருப்பீர்கள். இதனையும் மீறி நீங்கள் குறிப்பிட்ட செயலியை பயன்படுத்த விரும்பினால் குறிப்பிட்ட செயலியை இணையத்தில் இருந்து தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவிக்கொள்ளலாம்.

புதிய பதிப்பில் பழைய வசதி இல்லை!

உங்களுக்கு விருப்பமான ஒரு செயலியின் முன்னைய பதிப்பில் இருந்த ஒரு பயனுள்ள வசதி அதன் புதிய பதிப்பில் வழங்கப்படவில்லையா? அப்படியாயின் குறிப்பிட்ட செயலியின் முன்னைய பதிப்பிற்கான APK செயலியை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து நிறுவுவதன் மூலம் நீங்கள் முன்னர் பெற்ற அதே வசதியை அதன் பழைய பதிப்பில் இருந்து பெறலாம்.

புதிய பதிப்பு வரும் வரை பொறுமையில்லை.

ஒரு ஆண்ட்ராய்டு செயலியின் புதிய பதிப்பு கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட முன் நீங்கள் அதன் புதிய பதிப்பை பயன்படுத்திப்பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியாயின் அதற்கான APK பைலை இணையத்தில் இருந்து பெற்று பயன்படுத்திப் பார்க்கலாம்.
மேற்குறிப்பிட்டது போன்ற மேலும் பல சந்தர்ப்பங்களில் APK பைல் ஒன்றை பயன்படுத்தி எமது ஆண்ட்ராய்டு போனில் செயலிகளை நிறுவ வேண்டிய தேவை ஏற்படலாம்.

APK பைல் ஒன்றை ஆண்ட்ராய்டு போனில் நிறுவுவது எப்படி?

APK பைல் ஒன்றை உங்களது மொபைல் போனில் நிறுவிக்கொள்வது மிகவும் இலகு.
  1. APK பைல் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு, நீங்கள் உங்களது மொபலில் இன்ஸ்டால் செய்ய விரும்பும் செயலியின் APK பைலை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.Install APK on Android in Tamil
  2. பின்னர் டவுன்லோட் செய்த APK பைலை சுட்டுக. நீங்கள் அவ்வாறு நிறுவ முற்படும்போது “Install Blocked” என்ற பிழைச்செய்தி தோன்றும் (மேலே படத்தில் உள்ளவாறு.) இதனை தவிர்க்க குறிப்பிட்ட செய்தியின் கீழே வழங்கப்பட்டுள்ள “SETTINGS” என்பதை அலுத்துக.ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ்
  3. இனி Security செட்டிங்ஸ் பகுதி தோன்றும். அதில் Unknown sources என்பதை தெரிவு செய்க. இதன் போது  தோன்றும் டயலாக் பாக்ஸில் (Dialog Box) Allow this installation only. என்பதை டிக் (Tick) செய்து OK அலுத்துக.இன்ஸ்டால் ஆண்ட்ராய்டு ஆப்
  4. இறுதியாக “INSTALL” பட்டனை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட செயலியை உங்கள் மொபைலில் நிறுவலாம்.
அவ்வளவுதான்!
குறிப்பு: நம்பகத்தன்மை குறைந்த இணைய தளங்களில் இருந்து நீங்கள் தரவிறக்கும் APK கோப்புக்களை நிறுவுவதால் உங்களுக்கு தீங்கு ஏற்படலாம். எனவே APK பைல்களை நிறுவும்போது நம்பகரமான இணையதளங்களில் இருந்து மாத்திரம் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.