ddae8e38419165.56068b53c6e2c
2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றுவது ரொம்ப ஈசி!

2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு இணையதளம் ஒன்றை அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆர் ஃப்லெய்ஷெர் மற்றும் ஷிரின் அன்லென் ஆகிய இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்மதிப்பை அதிகரிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் 2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றும் Volume.glஎன்ற இணையதளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளத்தில் நாம் மொபைல், கேமரா போன்றவற்றில் எடுக்கும் 2D போட்டோக்களை மிக எளிதாக 3D போட்டோவாக மாற்றிவிடலாம்.